ஹைதராபாத்: கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிப்போனது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதால் டோக்கியோ ஒலிம்பிக் தொடங்கியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் குறித்த சில முக்கியமான தகவல்களை இத்தொகுப்பில் காணலாம்:
எத்தனை நாடுகள் ஒலிம்பிக்கில் கலந்துகொள்கின்றன?
206 நாடுகள்.
ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தடகள வீரர்கள் எத்தனை பேர்?
41 வெவ்வேறு விளையாட்டுகளில் பங்கேற்கும் 11,091 தடகள வீரர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.
கோடைக் கால ஒலிம்பிக் போட்டியில் என்னென்ன விளையாட்டுகள் நடத்தப்படும்?
30-க்கும் அதிகமான விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. நீச்சல் போட்டி, வில் போட்டி, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்டவை இதில் அடக்கம்.
ஒலிம்பிக்கில் இந்திய அணியின் பங்களிப்பு என்ன?
இந்தியா சார்பாக 127 தடகள வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தியா இந்தமுறை இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெல்லத் துடிக்கும் இளைஞர்களும் அனுபவசாலிகளும் நிறைந்த அணியாக இந்திய அணி இருக்கிறது.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொள்ளும் 15 பேரும் குறி தப்பாமல் பதக்கங்களை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும், 1980ஆம் ஆண்டிலிருந்து இந்தியா அதில் பெரிதாக ஜொலிக்கவில்லை. இந்தமுறை ஹாக்கி அணியின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
மன்ப்ரீத் சிங், ராணி ராம்பால் ஆகிய இருவரும் தங்கள் ஹாக்கி அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்கின்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் நேரலையை எதில் காணலாம்?
இந்தியாவில் சோனி டென் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
அடுத்த கோடைக் கால ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெறுகிறது?
2024ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்- தீபிகா குமாரி அசத்தல்