கோல்ப் ஜாம்பவான் என அறியப்படுபவர் அமெரிக்காவின் டைகர் உட்ஸ். இவர் இதுவரை 15 முறை கோல்ப் விளையாட்டில் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
இவரின் கார் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த டைகர் உட்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வெளியான செய்தியில், “கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரோலிங் ஹில்ஸ் பகுதியில் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டைகர் உட்ஸின் இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை, காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையில், டைகர் உட்ஸ் விரைவில் குணமடைய வேண்டுமென அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: பகலிரவு டெஸ்ட்: டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்