திருச்சி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் போட்டிகள் ஜூலை 31ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. டோக்கியோ ஒலிம்பிக்கின் தடகளப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் 26 பேர் பங்கேற்கின்றனர். இதில் ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டம் குண்டூரை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி டோக்கியோ ஒலிம்பிக்கில் 4×400 தொடர் ஓட்டப் போட்டிக்குத் தகுதிப்பெற்றிருந்தார்.
மேலும் 2 பேர்
இதேபோல், திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த சுபா வெங்கடேசன் கலப்பு 4×400 தொடர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். இவர் சென்னை தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணைய விடுதியில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருச்சி லால்குடியைச் சேர்ந்த தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ் 4×400 ஆடவர் தொடர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். இந்த வகையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 வீராங்கனைகள் உள்பட 3 பேர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் - தேசியக்கொடி ஏந்திச்செல்லும் மேரி கோம், மன்பிரீத் சிங்