புடாபெஸ்ட்: ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் 19-ஆவது உலக சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா 88.77 மீட்டர் ஈட்டியை வீசி இறுதி சுற்று மற்றும் அடுத்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றார்.
இந்த உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று இரவு 11.45 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய வீரரான நீரஜ் சோப்ராவுடன் தனக்கு எந்த போட்டியும் இல்லை என பாகிஸ்தான் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் கூறியுள்ளார். பாகிஸ்தான் வீரரான நதீம் உலக சாம்பியன்ஷிப் தகுதி சுற்றில் சீசன் பெஸ்டாக 86.79 மீட்டர் ஈட்டியை வீசி இறுதி போட்டி மற்றும் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி அடைந்துள்ளார். இருவரும் இன்று நடக்க இருக்கும் இறுதி போட்டியில் சந்திகின்றனர்.
இதையும் படிங்க: Virat Kohli: விராட் கோலி 4வது வீரராக களம் இறக்க ஆதரவு....ஏபி வில்லியர்ஸ் கருத்து!
பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் முழங்கை காயத்தின் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு பிறகு போட்டியில் கலந்து கொள்கிறார். மேலும், காயம் காரணமாக நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இருந்து வெளியறிய பிறகு, நதீம் 56 ஆண்டுகளுக்கு பிறகு தனது நாட்டிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார். அவர் 90.18 மீட்டர் ஈட்டியை எறிந்து தங்க பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IBSA World Games: இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி தங்கம் வென்று சாதனை!
இதுகுறித்து, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் கூறியதாவது. "நான் யாருக்கு ஏதிராகவும் விளையாடவில்லை. நான் என்னையே போட்டியாக எடுத்து கொண்டு, மேலும் சிறப்பாக செயல்பட முயற்ச்சிக்கிறேன். நீரஜ் சோப்ரா சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு எனது வாழ்த்துக்கள். மேலும், எனது வேலை எனது நாட்டிற்கு சிறப்பானதாக இருக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரைஇறுதிக்கு முன்னேறிய பிரணாய் - சாத்விக்/சிராக் ஷெட்டி தோல்வி