மெல்போர்ன் : செர்பியா நாட்டைச் சேர்ந்த உலக டென்னிஸ் பிரபலம் நோவக் ஜோகோவிச் (வயது 34), ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள கங்காருகளின் தேசமான ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார்.
அங்கு துரதிருஷ்டவசமாக அவரது விசா ரத்து செய்யப்பட்டது. கோவிட் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், கோவிட் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் நோவக் ஜோகோவிச் சமர்பிக்கவில்லை.
இந்நிலையில் ஜோகோவிச்சின் விசா ஜன.6ஆம் தேதி முதல் முறையாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் முயற்சி மேற்கொண்டு இரண்டாம் முறையாக விசா பெற்றார். இதுவும் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது மேல்முறையீடு மனுவை ரத்து செய்ததுடன், விசாவையும் ரத்து செய்து, அவரை ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டுள்ளது.
இதனால் உலகின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று பரவல கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக ஆஸ்திரேலியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஜன.17ஆம் தேதி தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நோவாக் ஜோகோவிச்சின் ஆஸ்திரேலிய விசா ரத்து