ETV Bharat / sports

கிரிக்கெட்டை தொடர்ந்து கபடியிலும் மாஸ் காட்ட காத்திருக்கும் தமிழ்நாடு! - உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில்

திருச்சி: வருகிற 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் லீக் தொடரை நடத்தவிருப்பதாகத் தமிழ்நாடு கபடி விளையாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu waiting for Mass entry
Tamil Nadu waiting for Mass entry
author img

By

Published : Dec 10, 2019, 5:11 PM IST

புரோ கபடி போட்டிகளைப் போலவே உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் வருகிற 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் போட்டிகளை நடத்த, தமிழ்நாடு கபடி சங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கூட்டம் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கபடி சங்கத்தின் தலைவர் முத்துசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 20 ஆண்டுகளாக இந்திய கபடி அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் யாரும் பங்கு பெறவில்லை. அதேபோல் இந்திய இன்டோர் பிரீமியர் லீக் போட்டியிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சில வீரர்கள் மட்டுமே இடம் பெற்றனர். மீதமுள்ள அனைவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் தமிழ்நாடு வீரர்களை கபடியில் ஊக்குவிக்கும் வகையில் 'தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் லீக் போட்டிகள்' வரும் மார்ச் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு கபடி சங்கத்தின் தலைவர் முத்துசாமி

இதற்கென தலா 15 தமிழ்நாடு வீரர்களைக் கொண்ட எட்டு அணிகள் உருவாக்கப்பட உள்ளது. இதில் மொத்தம் 120 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த எட்டு அணிகளையும் பிரபல தொழிலதிபர்கள், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரை உரிமையாளர்களாகக் கொண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான வீரர்கள் தேர்வு டிசம்பர் 14, 15ஆம் தேதிகளில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. 85 கிலோ எடைக்குள் இருந்தால் போதுமானது எனத் தெரிவித்தார்.

மேலும், முழுக்க முழுக்க இந்த 8 அணிகளும் தமிழ்நாடு வீரர்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கும். இந்தத் தேர்வில் சுமார் 500 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற முன்னணி கபடி வீரர்கள் எட்டு பேர் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் புரோ கபடி போட்டிகளைப் போல் இந்தப் போட்டிகளும் உள்விளையாட்டரங்கில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:தெற்காசிய விளையாட்டுப்போட்டி... கபடியில் தங்கங்களை வென்ற இந்தியா... பதக்கப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்

Intro:தமிழர்கள் 120 பேரை கொண்டு 8 கபடி அணியை உருவாக்க வீரர்கள் தேர்வு திருச்சியில் நடக்கிறதுBody:திருச்சி:
தமிழர்கள் 120 பேரை கொண்டு 8 கபடி அணியை உருவாக்க வீரர்கள் தேர்வு திருச்சியில் நடக்கிறது.
தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் லீக் போட்டிகளின் தலைவர் முத்துசாமி இன்று திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
கடந்த 20 ஆண்டுகளாக இந்திய கபடி அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் யாரும் பங்கு பெறவில்லை. அதேபோல் இந்திய இன்டோர் பிரீமியர் லீக் போட்டியிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சில வீரர்கள் மட்டுமே இடம் பெற்றனர். மீதமுள்ள அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அதனால் தமிழக வீரர்களை கபடியில் ஊக்குவிக்கும் வகையில் "தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் லீக் போட்டிகள்' வரும் மார்ச் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கென தலா 15 தமிழக வீரர்களை கொண்ட 8 அணிகள் உருவாக்கப்பட உள்ளது.
இதில் மொத்தம் 120 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த 8 அணிகளையும் பிரபல தொழிலதிபர்கள், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரை உரிமையாளர்களாக கொண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான வீரர்கள் தேர்வு டிசம்பர் 14, 15ம் தேதிகளில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. 85 கிலோ எடைக்குள் இருந்தால் போதுமானது.
இந்த தகுதியுள்ள வீரர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது தேர்வு நடைபெறும் என்று மைதானத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். முழுக்க முழுக்க இந்த 8 அணிகளும் தமிழக வீரர்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கும். இந்த தேர்வில் சுமார் 500 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற முன்னணி கபடி வீரர்கள் 8 பேர் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு பெறும் வீரர்களுக்கு அணிகளின் உரிமையாளர்கள் விரும்பும் மாவட்டங்களில் 10 நாள் பயிற்சி முகாம் நடத்தப்படும். மார்ச் மாதம் போட்டிகள் திருப்பூர், கோவை, சென்னை, மதுரை, திருச்சி அல்லது சேலம் ஆகிய 5 நகரங்களில் நடைபெறும். மொத்தம் மூன்று நாட்கள் 15 போட்டிகள் நடைபெறும். புரோ கபடி போட்டிகளை போல் இந்த போட்டிகளும் உள்விளையாட்டரங்கில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். போட்டிகள் இரவு 7 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். கபடியின் பூர்வீகம் மேற்குவங்க மாநிலம் ஆகும். பின்னர் அது படிப்படியாக வளர்ந்து ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே கபடியில் சிறந்து விளங்கியது, ஆனால் தற்போது இந்திய அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றார்.
போட்டியின் செயலாளர் சிங்காரவேலன், ஹேமநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.