டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த முகமது ஷமி சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 24 விக்கெட்கள் கைப்பற்றி சாதனை படைத்தார். இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஜாகீர் கான் சாதனையை முறியடித்தார்.
இதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கும் அர்ஜுன விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வைஷாலி சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். அதே போல் 2023ஆம் ஆண்டில் சிறந்த விளையாட்டு பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த மல்லகாம்ப் என்னும் பாரம்பரிய உடல் வித்தை விளையாட்டுற்காக கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் இந்திய அளவில் பல்வேறு விதமான விளையாட்டுகளில் சாதனை புரிந்த 26 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் பட்டியல்
பெயர் | விருது | |
1 | ஓஜஸ் பிரவின் டியோடலே | வில்வித்தை |
2 | அதிதி கோபிசந்த் சுவாமி | வில்வித்தை |
3 | ஸ்ரீசங்கர்.எம் | தடகளம் |
4 | பருல் சவுத்ரி | தடகளம் |
5 | முகமது ஹுசாமுதீன் | தடகளம் |
6 | ஆர் வைஷாலி | சதுரங்கம் |
7 | முகமது ஷமி | கிரிக்கெட் |
8 | அனுஷ் அகர்வாலா | குதிரையேற்றம் |
9 | திவ்யகிருதி சிங் | குதிரைச்சவாரி |
10 | திஷா தாகர் | கோல்ப் |
11 | கிரிஷன் பகதூர் பதக் | ஹாக்கி |
12 | புக்ரம்பம் சுசீலா சானு | ஹாக்கி |
13 | பவன் குமார் | கபடி |
14 | ரிது நேகி | கபடி |
15 | நஸ்ரீன் | கோ-கோ |
16 | பிங்கி | லவன் பவுல்ஸ் |
17 | ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் | துப்பாக்கி சூடு |
18 | இஷா சிங் | துப்பாக்கி சூடு |
19 | ஹரிந்தர் பால் சிங் சிந்து | ஸ்குவாஷ் |
20 | அய்ஹிகா முகர்ஜி | டேபிள் டென்னிஸ் |
21 | சுனில் குமார் | மல்யுத்தம் |
22 | ஆன்டிம் | மல்யுத்தம் |
23 | நெளரெம் ரோஷிபினா | வுஷீ |
24 | ஷீத்தல் தேவி | பாரா வில்வித்தை |
25 | இல்லூரி அஜய் குமார் ரெட்டி | பாரா கிரிக்கெட் |
26 | பிராச்சி யாதவ் | பாரா கேனோயிங் |
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி.. ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார்?