கன்னியாகுமரி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் டிசம்பர் மாதம் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் குமரி மாவட்டம் சார்பில் பங்கேற்கும் வீரர்கள் தேர்வு தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆறு முதல் 16 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு ஸ்கேட்டிங் க்ளப் வீரர்கள் கலந்துகொண்டனர்.
வீரர்கள் தேர்வு செய்யும் பணியை கலாசன்ஸ் பள்ளி துணை பங்குத்தந்தை ஜீன்ஸ் தொடங்கி வைத்தார். போட்டி ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஸ்டாலின், பங்குத்தந்தை ஜோஸ், குமரி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் செயலர் குமார் ஜேசுராஜன், பயிற்சியாளர்கள் ஜான், நவீன், பிரபு, பிபின்ராஜ், டென்னிஸ் ராஜ் ஆகியோர் மேற்கொண்டனர்.
மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க 15 மாணவர்கள் தேர்வாகியிருப்பதாக குமரி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் செயலர் குமார் ஜேசுராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #rugbyworldcup2019: சமோவாவை சாய்தது அயர்லாந்து!