ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்: தென் கொரிய சாம்பியனுக்கு கரோனா

முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனும், தென் கொரியா டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவருமான ரியூ சியூங்-மின் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Ryu Seung-min, ரியூ சியுங் மின்,  தென் கொரிய சாம்பியனுக்கு கரோனா
South Korean TT legend Ryu Seung-min tests positive upon arrival in Tokyo
author img

By

Published : Jul 18, 2021, 5:25 PM IST

டோக்கியோ (ஜப்பான்): டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் அனைவரும் ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்ட பின்னரே ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தென் கொரியா நாட்டின் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனும், தற்போதைய தென் கொரியா டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவருமான ரியூ சியூங்-மின் டோக்கியோ வந்துள்ள நிலையில், அவருக்கு நரிட்டா விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு டோஸ் செலுத்தியவர்

இதுகுறித்து சியூங்-மின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மிகுந்த மனவருத்தத்துடன் இந்த ஒலிம்பிக் தொடரில் கலந்துகொள்ள முடியாது என்ற தகவலை இங்கு பகிர்கிறேன்.

நான் கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுள்ளேன். தென்கொரியாவில் தொற்று இல்லை என்ற கண்டறியப்பட்ட பிறகே டோக்கியோவிற்குப் புறப்பட்டேன். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக இங்கு (நரிட்டா விமானநிலையம்) எனக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம்

ஆனால், என்னிடம் எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதன்மூலம், ஒலிம்பிக் கமிட்டி இந்தத் தொடரைப் பாதுகாப்பாக நடத்துவதில் எவ்வளவு கவனமாக செயல்படுகிறது என்பதை அறியலாம்" எனக் கூறியுள்ளார்.

நான்கு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள சியூங்-மின், 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது தடகள ஆணையத்தின் உறுப்பினராகவும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: டோக்கியோ சென்றடைந்த இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.