சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சமீபத்தில் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஆடவருக்கான பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சரத் கமல், ஏழு இடங்கள் முன்னேறி 31ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதன் மூலன் ஆடவர் பிரிவில், தரவரிசைப் பட்டியலில் அதிக இடத்தை பிடித்த இந்தியர் என்ற சாதனையையும் அவர் பெற்றார்.
இது குறித்து சரத் கமல் கூறுகையில், கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக விளையாட்டில் இருந்து விலகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இச்செய்தி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இந்த புள்ளிப் பட்டியலில் இந்தியாவின் ஹர்மித் தேசாய் 72ஆவது இடத்திற்கும், அந்தோணி அமல்ராஜ் 100ஆவது இடத்தையும், மனவ் தாக்கர் 139ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். மகளிர் தரவரிசைப் பட்டியலில் மணிக்கா பத்ரா 63ஆவது இடத்தையும், சுதிர்தா முகர்ஜி 95ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
இதையும் படிங்க: இவர்தான் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் - மெக்ராத்...!