பக்ரைன்: ஃபார்முலா 1 ரேஸ் விளையாட்டின் நாயகன் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக், பக்ரைன் கிராண்ட் பிக்ஸ் கார் பந்தயம் தொடரில் அறிமுகமாகியுள்ளார்.
கார் ரேஸ் விளையாட்டுகளில் உலக அளவில் புகழ்பெற்றவர் மைக்கேல் ஷூமேக்கர். இவரது மகன் மிக் பக்ரைன் கிராண்ட் பிக்ஸ் தொடர் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
இதையடுத்து இவர் தனது முதல் ரேஸ் பயணத்தைச் சிறப்பாக மேற்கொண்டதுடன், 16ஆவது இடத்தைப் பிடித்தார். ரேஸின்போது முதல் லேப்பில் நான்காவது வளைவில் மிக் கார் கட்டுப்பாட்டை இழந்து சிறிதாகச் சுழன்றது. இதன் பின்னர் வேறு எந்தத் தவறும் செய்யாமல் தனது ரேஸை சிறப்பாக முடித்தார்.
தனது முதல் ரேஸ் பயணம் குறித்து மிக் கூறுகையில், "90 விழுக்காடு நான் மகிழ்ச்சியாக உள்ளேன். சிறிய தவறு 10 விழுக்காடு கவலை அளித்தது. அந்தச் சுழற்சிக்குப் பின் பாதுகாப்பாகக் காரை மீண்டும் இயக்கி சிறப்பாக ரேஸை முடித்தேன்.
நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் காரில் எந்தப் பழுதும் ஏற்படாமல் பயணத்தைத் தொடர்வதற்கு ஏதுவாக இருந்தது. இந்தத் தடுமாற்றம் ஏன் நடந்தது எனப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் காரை இயக்கினேன்" என்றார்.
30 ஆண்டுகளுக்கு முன் தனது முதல் பயணத்தில் மைக்கேல் ஷூமேக்கரும் இதுபோன்ற தவறுகளைச் செய்தார். பின்னர் அவர் உலக அளவில் சாம்பியன் வீரரானார் எனது அவரது ரசிகர்கள் மிக் பயணம் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஐபிஎல்2021: 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடிய ஹர்பஜன் சிங்!