ETV Bharat / sports

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்... இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று அசத்தல்...

author img

By

Published : Mar 2, 2022, 11:53 AM IST

கெய்ரோவில் நடந்துவரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

saurabh-chaudhary-claims-gold-in-issf-world-cup-in-cairo

கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 16 புள்ளிகளுடன் ஜெர்மனியின் மைக்கேல் ஸ்வால்டை முந்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அதன்படி மைக்கேல் ஸ்வால்ட் வெள்ளிப்பதக்கமும், ரஷ்யா நாட்டின் ஆர்டெம் செர்னோசோவ் வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதே பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா வீராங்கனை இஷா சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். கிரீஸ் நாட்டு வீராங்கனை அன்னா கோராக்கி தங்கப்பதக்கம் வென்று முதலிடம் பிடித்தார்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 60 நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தமாக 20 பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவிற்கு ஒரு தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ஜேசன் ராய் விலகல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.