ETV Bharat / sports

Australia Open 2023: டானிலினா உடன் இணையும் சானியா மிர்சா! - Sports news in tamil

ஆஸ்திரேலிய ஓபன் 2023 டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தானின் டானிலினா உடன் சானியா மிர்சா இணைந்து போட்டியிட உள்ளார்.

Australia Open 2023: டானிலினா உடன் இணையும் சானியா மிர்சா!

author img

By

Published : Dec 23, 2022, 12:12 PM IST

டெல்லி: ஜனவரி 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2023 தொடங்குகிறது. இந்த நிலையில் இந்தியாவின் டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்சா, உலகளவில் நம்பர் 11 வீராங்கனையான கஜகஸ்தானின் அனா டானிலினா உடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் 2023இல் பங்கேற்க உள்ளார்.

இருப்பினும் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா யாருடன் போட்டியிட உள்ளார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பயிற்சியாளர் இம்ரான் மிர்சா கூறியுள்ளார். முன்னதாக சானியா மிர்சா இரண்டு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார்.

அதில் ஒன்று பெண்கள் இரட்டையர் பிரிவில் மார்டினா நவ்ரதிலோவா உடனும், மற்றொன்று 2009ஆம் ஆண்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் பெற்றார். மேலும் ஆஸ்திரேலிய ஓபன் 2022இல், பெண்கள் இரட்டையர் பிரிவில் நதியா கிச்செனோக்குடன் சானியா மிர்சா ஜோடி சேர்ந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார். அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராம் உடன் இணைந்து காலிறுதிக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க: IPL 2023 Auction: இன்று நடைபெறுகிறது ஐபிஎல் 2023 மினி ஏலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.