தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் 2022 போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய சீனியர் ஸ்பிரின்ட் பிரிவில் ரொனால்டோ சிங் கலந்து கொண்டார்.
தங்கப்பதக்கத்திற்கான மோதலில் ரொனால்டோ சிங் ஜப்பானின் அனுபவ வீரரான கென்டோ யாமாஸாகியை எதிர்கொண்டார். கென்டோ யாமாஸாகி ரொனால்டோ சிங்கை விட சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து இரண்டு பந்தயங்களில் வெற்றி கண்டு தங்கப்பதக்கம் வென்றார். இதனால் ரொனால்டோ சிங்கிற்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது.
இதுகுறித்து ரொனால்டோ சிங் கூறுகையில், 'தங்கம் வெல்ல வேண்டும் என்று நினைத்ததாகவும்; ஆனால் பிறந்த நாளன்று வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சியைத் தருவதாகவும்' தெரிவித்தார். வெண்கலப் பதக்கத்தை கஜகஸ்தானின் ஆண்ட்ரே சுகே வென்றார்.
ஒட்டுமொத்தமாக இந்தப்போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 15 வெண்கலப் பதக்கங்களை வென்றது. ஜப்பான் 18 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் என 27 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்றது.
இதையும் படிங்க: நீச்சல் குளத்தில் மூழ்கிய சிஷ்யை - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய குரு