ETV Bharat / sports

காந்தி மைதானத்திலிருந்து கபடி, கைப்பந்து பிரிவுகள் நீக்காமா? - வீரர்கள் அச்சம் - சேலம் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொறுப்பாளரா

சேலம்: இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் செயல்படும் கபடி, கைப்பந்து விளையாட்டு பிரிவுகளுக்கு உரிய பயிற்சியாளர்கள் இல்லாததால் விளையாட்டு வீரர்கள் அச்சமடைந்துள்ளனர்.

salem sai
salem sai
author img

By

Published : Feb 5, 2020, 7:30 AM IST

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் இந்திய விளையாட்டு ஆணையத்தின் அருகே காந்தி விளையாட்டு மைதானம் இயங்கிவருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, டேக்வாண்டோ ஆகிய நான்கு விளையாட்டுப் பிரிவுகளில் 60 மாணவர்கள் சேர்ந்து பயிற்சி பெற்றுவருகின்றனர்.

சென்னை, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு அடுத்த நிலையில் சேலத்தில் மட்டுமே இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் இயங்கி வருவதால், தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இங்கு பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் இந்திய விளையாட்டு ஆணையத்தில் இயங்கிவரும் கபடி, கைப்பந்து விளையாட்டுப் பயிற்சிப் பிரிவுகளுக்குப் போதிய பயிற்சியாளர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்படாததால் ஓய்வு பெற்றவர்களே மீண்டும் பயிற்சியளிக்கும் நிலை உருவாகியுள்ளது .

காந்தி மைதானத்திலிருந்து கபடி, கைப்பந்து நீக்காமா? வீரர்கள் அச்சம்!

பயிற்சியாளர்கள் இல்லை என்பதைக் காரணமாகக் காட்டி சேலத்திலிருந்து கைப்பந்து, கபடி விளையாட்டுப் பிரிவுகளை இந்திய விளையாட்டு ஆணையத்தின் டெல்லி தலைமை நீக்கி விடுமோ என்ற அச்சம் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொறுப்பாளராகப் பதவியேற்றுள்ள மாணிக்கவாசகம் கூறுகையில், "ஏற்கனவே இரண்டு விளையாட்டுப் பிரிவுகளுக்கும் இருந்த பயிற்சியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக டெல்லி தலைமை புதிய பயிற்சியாளர்களை நியமிக்க ஆலோசித்துவருகிறது. விரைவில் நியமிக்கப்படுவார்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: தங்கப் பதக்கம் வென்று சொந்த சாதனையை முறியடித்த மீராபாய் சானு!

Intro:சேலம் காந்தி விளையாட்டு மைதான வளாகத்தில் இயங்கி வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் , சேலம் பயிற்சி மையத்தில் செயல்படும் கபடி , கைப்பந்து விளையாட்டு பிரிவுகளுக்கு உரிய பயிற்சியாளர்கள் இல்லாததால் இரண்டு விளையாட்டுப் பிரிவுகளும் இல்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விளையாட்டு வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Body:இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ், சேலம் இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இயங்கிவருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் கைப்பந்து, கூடைப்பந்து , கபடி , தேக்வாண்டோ ஆகிய நான்கு விளையாட்டுப் பிரிவுகளில் 60 மாணவர்கள் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். சென்னை ,மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு அடுத்த நிலையில் சேலத்தில் மட்டுமே இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் இயங்கி வருவதால், தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இங்கு பயிற்சி எடுத்து பல்வேறு மாநில அணிகளில் சிறப்புற விளையாடி சாதனைகள் புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் இந்திய விளையாட்டு ஆணையத்தில் இயங்கிவரும் கபடி மற்றும் கைப்பந்து விளையாட்டு பயிற்சி பிரிவுகளுக்கு போதிய பயிற்சியாளர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது . 2 விளையாட்டு பிரிவுக்கும் ஏற்கனவே பயிற்சியாளராக இருந்தவர்கள் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப் படாததால் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பயிற்சி அளிக்கும் நிலை உருவாகியுள்ளது . பயிற்சியாளர்கள் இல்லை என்பதை காரணமாக காட்டி சேலத்திலிருந்து கைப்பந்து மற்றும் கபடி விளையாட்டு பிரிவுகளை இந்திய விளையாட்டு ஆணையத்தின் டெல்லி தலைமை நீக்கி விடுமோ என்ற அச்சம் சேலம் கபடி மற்றும் கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கபடி விளையாட்டு பிரிவில் 25 பேரும் கைப்பந்து விளையாட்டு பிரிவில் 12 பேரும் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் . இந்திய விளையாட்டு ஆணையத்தின் சேலம் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக்கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் கபடி மற்றும் கால்பந்து போட்டிகளில் மாநில தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று சேலத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர் . குறிப்பாக சீனியர் , ஜூனியர் , சப் ஜூனியர் ஆகிய பிரிவுகளில் கபடி போட்டிகளில் மாநில அளவில் சேலம் மைய மாணவர்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றனர் . அதே நேரத்தில் இங்கு பயிற்சிபெறும் வீரர்கள் விளையாட்டு பிரிவு ஒதுக்கீடு மூலம் பல்வேறு அரசு பணிகளுக்கும் தேர்வாகி செல்வது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயிற்சி மையத்திலிருந்து மோகன் ராமன் , ஐயப்பன் , பாலாஜி, பிரபஞ்சன், முத்துக்குமார் , அஜித் குமார் , ஜீவா ஆகிய வீரர்கள் தேசிய அளவில் சாதனை வீரர்களாக வலம் வருவதற்கு சேலம் பயிற்சி மையம் அடிப்படையான காரணம் என்றால் அது மிகையாகாது . கபடி விளையாட்டில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஜூனியர் அணியில் சேலம் பயிற்சி மையத்தை சேர்ந்த அபினேஷ் தேர்வாகி தற்போது தேசிய அளவில் விளையாடி வருகிறார் . கடந்த 2019ஆம் ஆண்டு சித்தார்த் என்ற மாணவர் அதேபோல தேர்வானது கவனிக்கத்தக்க விஷயம் . இந்த இரண்டு விளையாட்டுகளுக்கும் தற்போது சேலம் இந்திய விளையாட்டு ஆணையத்தில் 2020- 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . எனவே கைப்பந்து கபடி போட்டிகளுக்கான பயிற்சியாளர்களை நியமித்து மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தி ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் தேசிய அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாகி நாட்டிற்கு பெருமை சேர்க்க இந்திய விளையாட்டு ஆணையம் முன்வர வேண்டும் என்று முன்னாள் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Conclusion:கபடி மற்றும் கைப்பந்து விளையாட்டு பயிற்சி மையத்திற்கு பயிற்சியாளர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது குறித்து சேலம் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொறுப்பாளராக பதவியேற்றுள்ள மாணிக்கவாசகம் கூறுகையில்," ஏற்கனவே இரண்டு விளையாட்டு பிரிவுக்கும் இருந்த பயிற்சியாளர்கள் ஓய்வு பெற்று உள்ளனர் அவர்களுக்கு பதிலாக டெல்லி தலைமை புதிய பயிற்சியாளர்களை நியமிக்க ஆலோசித்து வருகிறது விரைவில் நியமிக்கப்படுவார்கள்" என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார். ( மாணிக்கவாசகம் பேட்டி அளிக்க வில்லை தகவல் மட்டுமே தெரிவித்தார்) சேலத்தின் மின்வாரிய கபடி அணி மற்றும் ரயில்வே அணி இவரை வங்கிகளின் விளையாட்டு பிரிவு அணிகள் ஆகியவற்றில் உள்ள மிகச்சிறந்த கபடி மற்றும் கைப்பந்து விளையாட்டு வீரர்கள் இங்கிருந்துதான் உருவானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் புதிய பயிற்சியாளர்களை நியமித்து இந்திய விளையாட்டு ஆணையத்தின் சேலம் பயிற்சி மையத்தில் கபடி மற்றும் கைப்பந்து விளையாட்டு பயிற்சியை வீரர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ( பேட்டி: 1. ராஜன் , முன்னாள் கபடி வீரர், சேலம் 2. மணிமாறன், விளையாட்டு ஆர்வலர், சேலம்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.