ரஷ்யாவின் தேசிய விளையாட்டான ஐஸ் ஹாக்கி கண்காட்சி போட்டிகள் ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கை ஆகியோர் லெஜண்ட்ஸ் அணிக்காக விளையாடினர்.
எதிரணியினராக அதிரப்ரின் சிறுவயது நண்பர் டைகூன், முக்கிய ரஷ்ய ஆளுநர்கள் கலந்துகொண்டு விளையாடினர். இதில் அபாரமாக ஆடிய ரஷ்ய அதிபர் புதின் 8 கோல்கள் அடித்து அசத்தினார். இதனைக் கண்டு ரசிகர்கள் உற்சாகமாகினர்.
இதனையடுத்து போட்டிக்கு பின்னர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உற்சாகமாக கை அசைத்து வந்தபோது, அதிபர் புதின் திடீரென தவறி கீழே விழுந்தார். பின்னர் சுதாரித்துக்கொண்ட புதின் மீண்டும் சுயமாக எழுந்து, மீண்டும் மக்களைப் பார்த்து கை அசைத்துச் சென்றார்.
கீழே விழுந்த அதிபர் புதினின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.