சென்னை: புரோ கபடி லீக் தொடரின் 10வது சீசன் கடந்த 2ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், புனேரி பல்டன், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ், பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைடன்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
-
थलाइवाज़ के प्लेटफार्म पर चल पड़ी है पाइरेट्स की गाड़ी 🚆
— ProKabaddi (@ProKabaddi) December 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
पटना वालों आज खुश तो बहुत होंगे तुम 🤩#ProKabaddiLeague #ProKabaddi #PKLSeason10 #PKL #HarSaansMeinKabaddi #CHEvPAT #TamilThalaivas #PatnaPirates pic.twitter.com/lFhE3mydp4
">थलाइवाज़ के प्लेटफार्म पर चल पड़ी है पाइरेट्स की गाड़ी 🚆
— ProKabaddi (@ProKabaddi) December 22, 2023
पटना वालों आज खुश तो बहुत होंगे तुम 🤩#ProKabaddiLeague #ProKabaddi #PKLSeason10 #PKL #HarSaansMeinKabaddi #CHEvPAT #TamilThalaivas #PatnaPirates pic.twitter.com/lFhE3mydp4थलाइवाज़ के प्लेटफार्म पर चल पड़ी है पाइरेट्स की गाड़ी 🚆
— ProKabaddi (@ProKabaddi) December 22, 2023
पटना वालों आज खुश तो बहुत होंगे तुम 🤩#ProKabaddiLeague #ProKabaddi #PKLSeason10 #PKL #HarSaansMeinKabaddi #CHEvPAT #TamilThalaivas #PatnaPirates pic.twitter.com/lFhE3mydp4
இந்நிலையில், இன்று (டிச.22) இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. இப்போட்டியில் இரு அணிகளும் சரிக்கு சம்மாக விளையாடி வந்தன. முதல் பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 20-21 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கியது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பாட்னா அணி, இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியை இரண்டு முறை ஆல் அவுட் செய்தது. இதனால் பாட்னா அணியின் புள்ளி வேகமாக முன்னேறியது. முதல் பாதியில் 20 புள்ளிகள் எடுத்த தமிழ் தலைவாஸ் அணியால் இரண்டாம் பாதியில் 13 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் பாட்னா அணி 46-33 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.
பாட்னா அணி இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகள் விளையாடி உள்ளது. அதில் 3 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அதேசமயம் தமிழ்தலைவாஸ் அணியோ விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளதால் புள்ளிப் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.
மேலும், சமீபத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்து மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் அதிகப்படியான இழப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரரான மாசானமுத்து லட்சுமணன் வீடு இடிந்து பாதிப்புக்குள்ளானது.
-
When the Thalaivas' captain said 𝔻𝔼𝔽𝕀ℕ𝕀𝕋𝔼𝕃𝕐 ℕ𝕆𝕋 😉#ProKabaddiLeague #ProKabaddi #PKL #PKLSeason10 #HarSaansMeinKabaddi #CHEvPAT #TamilThalaivas #PatnaPirates pic.twitter.com/pNrDfAMsyt
— ProKabaddi (@ProKabaddi) December 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">When the Thalaivas' captain said 𝔻𝔼𝔽𝕀ℕ𝕀𝕋𝔼𝕃𝕐 ℕ𝕆𝕋 😉#ProKabaddiLeague #ProKabaddi #PKL #PKLSeason10 #HarSaansMeinKabaddi #CHEvPAT #TamilThalaivas #PatnaPirates pic.twitter.com/pNrDfAMsyt
— ProKabaddi (@ProKabaddi) December 22, 2023When the Thalaivas' captain said 𝔻𝔼𝔽𝕀ℕ𝕀𝕋𝔼𝕃𝕐 ℕ𝕆𝕋 😉#ProKabaddiLeague #ProKabaddi #PKL #PKLSeason10 #HarSaansMeinKabaddi #CHEvPAT #TamilThalaivas #PatnaPirates pic.twitter.com/pNrDfAMsyt
— ProKabaddi (@ProKabaddi) December 22, 2023
இது போன்ற பல இன்னல்களுக்கு மத்தியில் இன்று நடைபெற்ற புரோ கபடி தொடரில் பாட்னா அணிக்கு எதிராகக் களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணியில் விளையாடினார். மேலும், அவர் அந்த அணிக்காக போனஸ் புள்ளிகளைப் பெற்றுத் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பத்ம ஸ்ரீ விருதை திருப்பி ஒப்படைப்பதாக பஜ்ரங் புனியா அறிவிப்பு!