ETV Bharat / sports

Praggnanandhaa: அடுத்த விஸ்வநாதன் ஆனந்த் நானா? - செஸ் நாயகன் பிரக்ஞானந்தாவின் பதில் என்ன? - ஃபிடே உலக சாம்பியன்ஷிப் தொடர்

எனது தாய் நான் விளையாடும் போது எனது முகத்தை பார்த்தே நன்றாக விளையாடுகிறேனா இல்லையா என்பதை தெரிந்துக்கொள்வார்கள் என பிரக்ஞானத்தா தனது தாய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

பிரக்ஞானந்தா
Praggnanandhaa
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 11:08 PM IST

கொல்கத்தா: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, கடந்த வாரம் தனது பெற்றோருடன் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு சென்றுள்ள பிரக்ஞானந்தாவின் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

கேள்வி: டாடா சர்வதேச செஸ் போட்டி எப்படி இருந்தது?

பதில்: இந்த போட்டியை பற்றி நான் பெரிதாக சிந்திக்கவில்லை. எனது அணி மிகவும் பலமாக உள்ளது. இப்போதைக்கு ஒய்வில் இருக்கிறேன்

கேள்வி: உலக செஸ் சாம்பியன்ஷிப் பற்றிய அனுபவங்கள் பகிர முடியுமா?

பதில்: உலக சாம்பியன் ஆவதற்கு அனைத்து தகுதிகளும், திறமைகளும் என்னிடம் உள்ளது என நினைக்கிறேன் விரைவில் சாம்பியன் பட்டம் வெல்வேன் என நம்புகிறேன்.

கேள்வி: போட்டியில் போது ஏற்படும் அழுத்தத்தை எப்படி கையாளுகிறீர்கள்?

பதில்: போட்டியை பற்றி நான் கவலைப்படுவதில்லை. களத்தில் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க முயல்வேன் அதனால் மன அழுத்தம் இருக்காது.

கேள்வி: உலக புகழ்பெற்ற வீரர் கார்ல்செனுக்கு எதிராக விளையாடிய அனுபவம் எப்படி இருந்தது?

பதில்: ஆன்லைனிலும் சரி ஆப்லைனிலும் சர் கார்ல்சென் இரண்டிலுமே மிகவும் வலிமையான ஒருவர். நான் அவருக்கு எதிராக விளையாடும் போது, அவர் அடுத்ததாக எந்த காய்யை நகர்த்துவார் என்றே சிந்திப்பேன். அவரிடம் இருந்து நான் எப்போதுமே கற்றுக்கொள்ளவே முயற்சிக்கிறேன். அவர் கடந்த 10 ஆண்டுகளாக உலக சாம்பியன்ஷிப்பில் சிறந்த வீரராக இருந்து வருகிறார்.

கேள்வி: நீங்கள் அடுத்த விஸ்வநாதன் ஆனந்த் என்று கூறப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நான் அவரது அகாடாமியில் பல நாட்களாக தங்கி இருந்தேன். நான் அவரிடமிருந்து பல விசியங்களை கற்று இருக்கிறேன். நாங்கள் செஸ் சம்பந்தமான அனைத்தையும் ஆலோசிப்போம். போட்டிக்கு முன்பு என்ன செய்ய வேண்டும், என்ன உணவு முறை தேவை என்பதை பற்றியேல்லாம் கலந்து ஆலோசிப்போம்.

கேள்வி: செஸ் தவிர வேறு விளையாட்டை ஏதும் நீங்கள் விரும்புகிர்களா?

பதில்: எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். நான் ரவிச்சந்திரன் அஸ்வினின் மிக பெரிய ரசிகர். இந்தியா விளையாடினால் தவறாமல் பார்ப்பேன்.

கேள்வி: செஸ் வெற்றியில் உங்கள் தாயின் பங்கு பற்றி செல்லுங்கள்?

பதில்: என் அம்மா என்னோடு எங்கு வந்தாலும் மின்சார அடுப்போடு தான் வருவார்கள். எனக்கு பிடித்த பல உணவுகளை செய்து தருவார்கள். நான் சிறப்பாக விளையாடுகிறேனா இல்லையா என்பதை எனது முகத்தை வைத்தே கண்டுப்பிடித்து விடுவார்கள்.

கேள்வி: பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பை பற்றி கூறுங்கள்?

பதில்: அவர் மிகவும் நன்றாக பேசினார். மேலும், எனது பயிற்சியை பற்றியும் எனது அம்மா மற்றும் அப்பாவிடமும் பேசினார்.

இதையும் படிங்க: BAN Vs AFG: மெஹிதி ஹசன், நஜ்முல் ஹொசைன் சதம்.. வங்கதேசம் அபார வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.