2020ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஜூலை 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ஆம் தேதிவரை நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க இதுவரை குத்துச்சண்டை, துப்பாக்கிச் சுடுதல், ஹாக்கி, வில்வித்தை, மல்யுத்தம், தடகளம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்பதற்கு இந்தியாவிலிருந்து 74 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
நீண்ட நாள்களுக்கு பிறகு ஹாக்கியில் ஆடவர், மகளிர் அணிகள் பதக்கத்தைக் கைப்பற்றுவார்கள் என எதிர்பார்ப்படுகிறது. அதேபோல் துப்பாக்கிச் சுடுதலில் மனு பேக்கர், சவுரப் செளத்ரி, அபிஷேக் வர்மா, தீபக் குமார் ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
துப்பாக்குச் சுடுதலில் மட்டும் இந்தியாவிலிருந்து 15 வீரர்கள் 21 போட்டிகளில் பங்கேற்கவுள்ளதால், நிச்சயம் பல பதக்கங்கள் கைப்பற்றப்படும் என கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் கூர்ந்து கவனிக்கப்படும் விளையாட்டு போட்டி என்பதால், இம்முறை இந்திய அணி பதக்க எண்ணிக்கையை இரட்டை இலக்க எண்களில் கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு போட்டியில் வென்றால் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லலாம்... அமித் முன்நிற்கும் சவால்!