வெனிசுலாவுக்காக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் வாள்வீச்சில் தங்கப்பதக்கம் வென்றவர் ரூபன் லிமார்டோ. இன்னும் வாள்வீச்சில் பயிற்சி செய்து வரும் இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.
ஆனால் சமீபத்தில் இவர் தனது வேலை குறித்து பதிவிட்ட ட்வீட், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் கரோனா சூழலுக்கு நடுவே, தனது தேவைகளுக்காக உணவு டெலிவரி செய்வது சமூகவலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
Si estás en Lodz - Polonia y pides @UberEats es posible que tu comida la entregue un campeón que decidió no rendirse jamás. pic.twitter.com/2xFgVFndAY
— Rubén Limardo Gascón (@rubenoszki) November 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Si estás en Lodz - Polonia y pides @UberEats es posible que tu comida la entregue un campeón que decidió no rendirse jamás. pic.twitter.com/2xFgVFndAY
— Rubén Limardo Gascón (@rubenoszki) November 9, 2020Si estás en Lodz - Polonia y pides @UberEats es posible que tu comida la entregue un campeón que decidió no rendirse jamás. pic.twitter.com/2xFgVFndAY
— Rubén Limardo Gascón (@rubenoszki) November 9, 2020
இதுகுறித்து அவர் கூறுகையில், ''நமது வழியில் நாம் பணம் சம்பாரிக்க வேண்டும். மற்ற வேலைகளை போல் தான் இதுவும். நான் மட்டுமல்ல எனது வாள்வீச்சு அணியில் உள்ள 20 பேரும் உணவு டெலிவரி செய்யும் வேலை தான் செய்து வருகிறோம்'' என்றார்.
இதையும் படிங்க: ஊக்கமருந்து விவகாரம்: ஆஸி., நீச்சல் வீராங்கனைக்கு இரண்டு ஆண்டுகள் தடை...!