ETV Bharat / sports

#ISBF2019: இரட்டையர் பிரிவிலும் இந்தியா உலகச் சாம்பியன்...! அத்வானி, ஆதித்யா சாதனை! - Winner of the World Championship Billiards Series for the 23rd time

உலகச்சாம்பியன்ஷிப் பில்லியர்ட்ஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, ஆதித்யா மேத்தா இணை சாம்பியன் பட்டம் வென்றது.

#ISBF2019
author img

By

Published : Sep 26, 2019, 8:37 AM IST

உலகச்சாம்பியன்ஷிப் பில்லியர்ட்ஸ் தொடர் மியான்மர் நாட்டின் மாண்டலே நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, ஆதித்யா மேத்தா இணை தாய்லாந்தின் தனாவத் திரபோங்பைபூன் (Thanawat Tirapongpaiboon), கிருட்சானட் லெர்ட்சட்டாயதோர்ன் (Kritsanut Lertsattayathorn) எதிர்கொண்டனர்.

இப்போட்டியில் பங்கஜ் அத்வானி 23ஆவது முறையாக உலகச்சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருந்தார். மறுமுனையில் ஆதித்யா மேத்தா தனது முதல் உலகச்சாம்பியன் பட்டத்திற்காக விளையாடி வந்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.

அதேபோல் தாய்லாந்து நாட்டின் நட்சத்திர வீரர்களான தனாவத்-கிருட்சானட் இணை இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டனர்.

இறுதியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, ஆதித்யா மேத்தா இணை 4-1 என்ற கணக்கில் தாய்லாந்தின் தனாவத் டிராபோங்பைபூன், கிருட்சானட் லெர்ட்சட்டாயதோர்ன் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இதன்மூலம் பங்கஜ் அத்வானி 23ஆவது முறையாக உலகச்சாம்பியன்ஷிப் பில்லியர்ட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப்படைத்தார். ஆதித்யா மேத்தா தனது முதல் உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றினார்.

கடந்த வாரம் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் பில்லியர்ட்ஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி 22ஆவது சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:#IBSF2019: 22ஆவது முறையாக பட்டம் வென்று சாதனைப் படைத்த அத்வானி!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.