உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்படிருந்தன. குறிப்பாக, கடந்த 2020ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் தொடர் 2021ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போதும் வைரஸ் பரவல் குறைந்து வருவதினால், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடத்த மாற்று யோசனைகளை சர்வதேச ஒலிம்பிக் குழு ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், இத்தகவலை சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் தாமஸ் பேச் மறுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்த நாங்கள் உழைத்து வருகிறோம்.
அதனால் இப்போட்டிகள் குறித்த மாற்று யோசனைகளை நாங்கள் சிந்திக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை - விழா மேடையை அகற்ற சுகாதாரத்துறை அலுவலர்கள் உத்தரவு!