உலகக் கோப்பை ரக்பி தொடர் ஜப்பான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து அணி, அயர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே நியூசிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்தை அயர்லாந்து அணியால் சமாளிக்க முடியாமல் போனது. தொடர்ந்து களத்தில் மிரட்டலாக விளையாடிய நியூசிலாந்து அணி 46-14 என்ற புள்ளிகள் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.