இந்தியாவில் வளர்ந்துவரும் இளம் வீரர்களை மனதில் கொண்டும், வருகிற 2024, 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வதற்காகவும் இந்திய விளையாடு அமைச்சகம் அதி நவீன வசதிகொண்ட இருபது தேசிய விளையாட்டு மையங்களை நிறுவ இருப்பதாக மத்திய விளையாட்டுத் துறை இணையமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”2024 மற்றும் 2028 ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்களை தயார்படுத்தும் முயற்சியில் இந்திய விளையாட்டு அமைச்சகம் 20 சிறந்த தேசிய விளையாட்டு மையங்களை உருவாக்கும். ஒவ்வொரு மையமும் நான்கு முதல் ஆறு குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு நிதி வழங்கும். இதன் மூலம், விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சியினை தயார்படுத்தினால் அந்தந்த விளையாட்டில் வீரகள் அதிக செயல்திறனை அடைய முடியும்” என்றார்.
தேசிய விளையாட்டு, மையங்களாக பாட்டியாலா, திருவனந்தபுரம், சண்டிகர், சோனேபட், லக்னோ, கவுஹாத்தி, இம்பால், கொல்கத்தா, போபால், பெங்களூரு, மும்பை மற்றும் காந்திநகர், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், இந்திரா காந்தி ஸ்டேடியம், மேஜர் தியான் சந்த் தேசிய மைதானம், டாக்டர் கர்னி சிங் ஷூட்டிங் டெல்லியில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி நீச்சல் குளம் வளாகம், தேசிய நீர் விளையாட்டு அகாடமி (கெலோ இந்தியா), அலெப்பி, தேசிய குத்துச்சண்டை அகாடமி (கெலோ இந்தியா), ரோஹ்தக், தேசிய மல்யுத்த அகாடமி (கெலோ இந்தியா), அவுரங்காபாத் ஆகியவை தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளன.