இந்திய விளையாட்டுத்துறையில், சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், 2019ஆம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை இளம் தடகள வீரரான நீராஜ் சோப்ராவுக்கு வழங்க, இந்திய தடகள சம்மேளனம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
21 வயதான இவர், கடந்த ஆண்டு ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில், ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். இதனால், இவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஆசிய போட்டியில் தடகளப் பிரிவில் தங்கம் வென்ற இந்திய நட்சத்திரங்களான தஜிந்தர் பால் சிங் (குண்டு எறிதல்), அர்பிந்தர் சிங் (ட்ரிப்பிள் ஜெம்ப்), மந்ஜித் சிங் (800மீ ஓட்டப் பந்தயம்), சவுப்னா பர்மான் (ஹெபத்லான்) ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்க இந்திய தடகள சம்மேளனம் பிரிந்துரை செய்துள்ளது.