ETV Bharat / sports

நட்சத்திர கூடைப்பந்து வீரர் கெவின் டியூரண்ட்டிற்கு கரோனா! - கரோனா வைரஸ் செய்திகள்

அமெரிக்காவின் என்பிஏ தொடரில் ப்ரூக்லின் அணிக்காக ஆடும் கெவின் டியூரண்ட் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

nba-star-kevin-durant-tested-positive-for-coronavirus

author img

By

Published : Mar 18, 2020, 2:46 PM IST

கரோனா வைரஸ் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விளையாட்டு வீரர்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவின் எம்பிஏ கூடைப்பந்தாட்டத் தொடரின் நட்சத்திர வீரர் கெவின் டியூரண்ட் (Kevin Durant). இவர் ப்ரூக்லின் நெட்ஸ் அணிக்காக ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே ப்ரூக்லின் அணியின் நான்கு வீரர்களுக்கு கரோனா பாதிப்பைக் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் கெவின் டியூரண்ட்டிற்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனால் நான்கு வீரர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அணி நிர்வாகம் கூறுகையில், '' அணி நிர்வாகத்தின் தரப்பில் வீரர்களின் நடவடிக்கைகள் கூர்மையாக கவனிக்கப்பட்டு வந்தது. கெவின் டியூரண்டைத் தவிர்த்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மற்ற மூன்று வீரர்கள் யார் என்ற விவரத்தை இப்போது கூறமுடியாது. பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு சிறந்த மருத்துவம் வழங்கப்பட்டுவருகிறது. அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்'' என்றார்.

இதேபோல் கூடைப்பந்தாட்ட வீரர் ருடி கோபர்ட்டிற்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா வைரஸை கிண்டல் செய்த கூடைப்பந்து வீரருக்கு கொரோனா பாதிப்பு - என்.பி.ஏ போட்டிகள் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.