சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாகக் கூறப்படும் கோவிட்-19 (கொரோனா) என்ற வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்திவரும் இந்த வைராஸ் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதன் விளைவாக, டென்னிஸ், கால்பந்து, ரக்பி, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டும், நிறுத்தி வைக்கப்பட்டும் உள்ளன. தற்போது அந்த வரிசையில், அமெரிக்காவில் பிரபலமான என்.பி.ஏ கூடைப்பந்து போட்டியும் இணைந்துள்ளது.
-
NBA To Suspend Season Following Tonight's Games pic.twitter.com/2PTx2fkLlW
— NBA (@NBA) March 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">NBA To Suspend Season Following Tonight's Games pic.twitter.com/2PTx2fkLlW
— NBA (@NBA) March 12, 2020NBA To Suspend Season Following Tonight's Games pic.twitter.com/2PTx2fkLlW
— NBA (@NBA) March 12, 2020
நடப்பு சீசனுக்கான நேற்றைய ஆட்டத்தில் ஜாஸ் - தண்டர் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெறவிருந்தது. போட்டிக்கு முன்னதாக ஜாஸ் அணியைச் சேர்ந்த ருடி கோபர்டிற்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், நடப்பு சீசன் போட்டிகள் தற்காலிகமாக நிறித்தி வைக்கப்பட்டுள்ளதாக, என்பிஏ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
-
Rudy Gobert jokingly touches microphone during a media interview Monday. Today, tests positive for Corona.
— Modern Notoriety (@ModernNotoriety) March 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Video: Dan Weiner pic.twitter.com/hWHNwsu8qk
">Rudy Gobert jokingly touches microphone during a media interview Monday. Today, tests positive for Corona.
— Modern Notoriety (@ModernNotoriety) March 12, 2020
Video: Dan Weiner pic.twitter.com/hWHNwsu8qkRudy Gobert jokingly touches microphone during a media interview Monday. Today, tests positive for Corona.
— Modern Notoriety (@ModernNotoriety) March 12, 2020
Video: Dan Weiner pic.twitter.com/hWHNwsu8qk
மேலும், இந்த போட்டி எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ருடி கோபர்ட் மைதானத்தில் வரவில்லை என்றாலும், மக்கள், வீரர்களின் நலன் கருதி போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கைகளை நன்கு சுத்தமாக வைத்துக்கொள்ளும் படி உலக மக்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பின் போது ருடி கோபர்ட் அனைத்து மைக்குளையும் (Mic) தொட்டு கொரோனா வைரஸை கிண்டல் செய்திருந்தார் என்பது கவனத்துக்குரியது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை கொரோனா வைரஸால் 1,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: இத்தாலி கால்பந்து வீரருக்கு கொரோனா பாதிப்பு!