மல்யுத்த விளையாட்டை ஊக்குவிக்கும்வகையில் ஆண்டுதோறும் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் என்ற பெயரில் மல்யுத்த தொடரை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நடத்திவருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான மல்யுத்த தொடர் வரும் டிசம்பர் மாதம் தொடங்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக இத்தொடரை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயலாளர் வினோத் தோமர் கூறுகையில், "தற்போதுள்ள சூழ்நிலையில் திட்டமிட்டபடி மல்யுத்த தொடரை நடத்த முடியாது. அதனால் இத்தொடரை அடுத்தாண்டு ஜனவரி மாதம் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும் டிசம்பர் 12ஆம் தேதி செர்பியாவில் தொடங்கவுள்ள உலகக்கோப்பை மல்யுத்தப் போட்டிக்கு இந்திய வீரர்களை அனுப்பவும் ஒப்புதல் அளித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2ஆவது ஒருநாள்: தொடரைத் தன்வசப்படுத்துமா இந்தியா?