ETV Bharat / sports

திருச்சியில் தேசிய அளவிலான செஸ் போட்டி இன்று தொடக்கம்!

author img

By

Published : Nov 7, 2019, 10:08 PM IST

திருச்சி: பிரபல தனியார் பள்ளியின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான செஸ் போட்டிகள் திருச்சியில் இன்று தொடங்கியது.

National level chess tournament

திருச்சி தில்லைநகர் பகுதியிலுள்ள பிரபல தனியார் பள்ளியின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான செஸ் போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டியானது அப்பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உட்பட 8 மாநிலங்களைச் சேர்ந்த செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இப்போட்டிகளில் ஐசிஎப், வங்கி அணிகளும் கலந்துகொள்கின்றன.

தேசிய அளவிலான செஸ் போட்டி

இதில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் இப்போட்டிகளில் வெற்றியாளர்களுக்கு 50 கிராம் தங்க நாணயம், 420 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்கப்படுகிறது. இதில் மொத்தம் 630 பேர் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் போட்டி இன்று முதல் 4 நாட்கள் நடக்கவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:'நான் இருக்கப்போ விளையாடிருந்தா ஸ்மித்தை காயப்படுத்தியிருப்பேன்' - சோயப் அக்தர்

Intro:திருச்சி மகாத்மா காந்தி செண்டெனரி வித்யாலயா பள்ளியின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான செஸ் போட்டி இன்று தொடங்கியது. Body:திருச்சி:
திருச்சியில் தேசிய அளவிலான செஸ் போட்டி இன்று தொடங்கியது.
திருச்சி மகாத்மா காந்தி செண்டெனரி வித்யாலயா பள்ளியின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான செஸ் போட்டி இன்று தொடங்கியது. திருச்சி தில்லைநகர் 80 அடி ரோட்டில் உள்ள பள்ளியின் வளாகத்தில் இந்தப் போட்டி சர்வதேச தரம் பெற்று நடத்தப்படுகிறது.
இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உட்பட 8 மாநிலங்களைச் சேர்ந்த செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இது தவிர ஐசிஎப், வங்கி அணிகளும் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில் வெல்பவருக்கு முதல் பரிசாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் வெற்றியாளர்களுக்கு 50 கிராம் தங்க நாணயம், 420 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்கப்படுகிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிதிவண்டிகள் பரிசாக வழங்கப்படுகிறது. இதில் மொத்தம் 630 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போட்டி இன்று முதல் 4 நாட்கள் நடக்கிறது. அதிக புள்ளிகளை பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். சர்வதேச மென்பொருள் இந்த போட்டிக்கு பயன்படுத்தப்படுகிறது.

பேட்டி: விஜயராகவன் தலைமை நடுவர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.