தோகா: கத்தாரில் நடந்துவரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று (டிசம்பர் 10) அல்துமாமா மைதானத்தில் 3ஆவது காலிறுதிப்போட்டி நடந்தது. இந்த போட்டியில் போர்ச்சுக்கல், மொராக்கோ அணிகள் மோதின. இந்த அணிகளில் மொராக்கோ முதல் முறையாக லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
மறுப்புறம் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி இருப்பதால் போட்டி விறுவிறுப்புடன் தொடங்கியது. முதல் பாதியில் 42ஆவது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸிரி கோல் அடித்தார். அந்த வகையில் முதல்பாதி 1-0 என்ற கணக்கில் முடிந்தது. இரண்டாவது பாதியில் கோல் அடிக்க எவ்வளவு முயற்சித்தும் இரு அணி வீரர்களாலும் முடியவில்லை.
இறுதி வரை போர்ச்சுகல் அணி போராடியும் கோல் அடிக்க முடியாததால், மொராக்கோ அணி 1-0 என்ற கோல் வெற்றி பெற்றது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த மொராக்கோ அணி முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆப்பிரிக்க அணி என்பதால் அந்நாட்டு மக்கள் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனிடையே ரொனால்டோ கண்ணீருடன் மைதானைத்தை விட்டு வெளியேறியது. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: FIFA World Cup: காலிறுதியில் வெளியேறிய பிரேசில்