இங்கிலாந்து: 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் பர்மிங்ஹாம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. 72 நாடுகள் இந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளன. இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில், 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று (ஜூலை 31) நடந்த ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் வீரர் ஜெரமி லால்ரினுங்கா தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக, மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் மொத்தம் 198 கிலோ எடையை தூக்கி மீராபாய் சானு தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
தொடர்ந்து ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அடுத்தபடியாக 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் குருராஜ் பூஜாரி 269 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதேபோல் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி பிந்தியாராணி தேவி சொரோகைபம் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனால் பதக்கப் பட்டியலில் இந்தியா இரண்டு தங்கங்களைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 16 வயது கிரிக்கெட் பௌலரைப் பாராட்டிய ராகுல் காந்தி - பயிற்சிக்கு உதவ முன்வந்த ராஜஸ்தான் அரசு