ETV Bharat / sports

இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுக்கொடுத்தார் மீராபாய் சானு - காமன்வெல்த் 2022

காமன்வெல்த் தொடரில் மகளிர் பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவின் மீராபாய் சானு சாதனை படைத்துள்ளார்.

மீராபாய் சானு
மீராபாய் சானு
author img

By

Published : Jul 30, 2022, 10:40 PM IST

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் 2022 போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் நேற்று (ஜூலை 29) தொடங்கியது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் மொத்தம் 205 பேர் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், மகளிர் பளு தூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிச்சுற்று இன்று (ஜூலை 30) நடைபெற்றது.

இதில், இந்தியா சார்பில் மீராபாய் சானு பங்கேற்றார். இதில் மீராபாய் ஸ்னாட்ச் முறையில் 90 கிலோ பளுவையும், கிளீன் & ஜெர்க் முறையில் 113 கிலோ பளுவையும் தூக்கி மொத்தம் 201 கிலோவுடன் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். இது தொடரின் முதல் தங்கப்பதக்கமாகும்.

  • MIRABAI WINS GOLD 🥇@mirabai_chanu wins 1️⃣st Gold & 3️⃣rd Medal for 🇮🇳 at @birminghamcg22 🤩🤩 & her 3rd consecutive medal at CWG: 2 🥇1 🥈

    The Confident Mira lifted a total of 201 Kg (GR) in the Women's 49kg Finals🏋‍♂️ at #B2022

    Snatch- 88kg (GR)
    Clean & Jerk- 113kg (GR)
    1/1 pic.twitter.com/kI56gxxIqg

    — SAI Media (@Media_SAI) July 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் தற்போது, காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார். மீராபாய் 2014 காமன்வெல்த் போட்டியில் வெள்ளியும், 2018இல் தங்கமும் வென்றிருந்தது நினைவுக்கூரத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.