25ஆவது தேசிய அளவிலான பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் 49 கிலோ எடைப்பிரிவுக்கான போட்டியில் மனிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு பங்கேற்றார்.
இதில், ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோவும், க்ளின் அண்ட் ஜெர்க் முறையில் 115 கிலோவும் என மொத்தம் 203 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம், கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் தான் தூக்கிய 201 கிலோ எடை சாதனையை அவர் முறியடித்தார்.
நூர் சுல்தானில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் தொடருக்கும், அதன் பின் ஜூலையில் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடருக்கும் தயாராகும் வகையில் மீராபாய் சானு உள்ளிட்ட மற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்த தொடர் (தேசிய அளவிலான சாம்பியன்ஷிப்) உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மூளையில் ஏற்படும் அதிர்ச்சிகளைக் கண்டறிய புதிய கருவியை உருவாக்கிய மருத்துவக் குழு!