ETV Bharat / sports

மேடன் கோப்பை: தங்கம் வென்ற அபூர்வி சண்டிலா தங்கம்! - துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அபூர்வி சண்டிலா

ஆஸ்திரியாவில் நடைபெற்றுவரும் மேடன் துப்பாக்கிச் சுடுதல் தொடரின் மகளிர் தனிநபர் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்கப் பதக்கம் வென்றார்.

Meyton Cup: Apurvi Chandela bags gold in 10m air rifle event

author img

By

Published : Jan 21, 2020, 6:43 PM IST

மேடன் துப்பாக்கிச் சுடுதல் கோப்பை ஆஸ்திரியாவின் இன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் தனிநபருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அபூர்வி சண்டிலா பங்கேற்றார்.

இதில், சிறப்பாகச் செயல்பட்ட அவர் 251.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான அஞ்சும் மோட்கில் 229 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

இதேபோல் நடைபெற்ற ஆடவர் தனிநபருக்கான 10 மீ ஏர் ஃரைபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யான்ஷ் சிங் பன்வார் 249.7 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் மற்றொரு இந்திய வீரர் தீபக் குமார் 228 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதையும் படிங்க: ஆடவேண்டிய டென்னிஸ் இன்னும் அதிகமுள்ளது - சானியா மிர்சா

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sports/other-sports/meyton-cup-apurvi-chandela-bags-gold-in-10m-air-rifle-event/na20200121161301723

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.