லண்டன்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் பேட்டி லண்டன் ஆல் இங்கிலாந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் செக்குடியரசின் மார்கெட்டா வோண்டுரோஸோவாவும் - துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுரும் மோதினர். உலக தரவரிசையில் 6வது இடத்தில் ஆன்ஸ் ஜபியுர் உள்ளார். 42வது இடத்தில் மார்கெட்டா உள்ளார்.
முதல் செட்டில் ஆன்ஸ் ஜபியுர் முன்னிலை வகித்த நிலையில், அதன் பின் தனது மட்டைச் சுழற்சியை வெளிப்படுத்தி மார்கெட்டா 6-4 என முன்னிலை பெற்று முதல் செட்டை கைப்பற்றினார். அதே போல் இரண்டாவது செட்டில் ஆன்ஸ் ஜபியுர் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வந்தார். ஆனால், ஜபியுர் இழைத்த சிறிது சிறிது தவறுகளை தன் வசமாக்கி 6-4 என்ற கணக்கில் முன்னேறி இரண்டாவது செட்டையும் வசப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றார், மார்கெட்டா.
இதையும் படிங்க: ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அப்ஸ்டாக்ஸ் அணி அறிவிப்பு!
மார்கெட்டா 24 வயதான செக்குடியரசின் இடது கை ஆட்டகாரர் ஆவார். இது இவருக்கு கிடைத்த முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். இதற்கு முன்பு 2019இல் பிரஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை நழுவ விட்டார். ஜேனா நவோட்னா, பெட்ரா குவிட்டோவா ஆகியோர் செக்குடியரசின் தரப்பில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 3வது முறையாக நுழைந்த ஆன்ஸ் ஜபியுர் மீண்டும் ஒரு முறை கோப்பையை நழுவ விட்டார். எற்கனவே இவர் 2022ஆம் ஆண்டு விம்பிள்டன் மற்றும் அமெரிக்க பேட்டிகளில் இறுதிச் சுற்று வரை சென்று தோல்வி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் பட்டத்தை வென்ற மார்கெட்டா ரூ.24.5 கோடி பரிசு பெற்றுள்ளார். தோல்வி அடைந்த ஆன்ஸ் ஜபியுர் 12 கோடி ரூபாயை பரிசாக பெற்றார்.
சாதனைகள்: ஒபன் போட்டிகளில் விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் பெண்மனி மார்கெட்டா வோண்டுரோஸோவா. இவர் தர வரிசையில் இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது.
ஜனா நோவோட்னா மற்றும் பெட்ரா க்விடோவா ஆகியோருக்குப் பிறகு, வீனஸ் ரோஸ்வாட்டர் டிஷ்ஸை உயர்த்திய மூன்றாவது செக் பெண்மணி வோண்ட்ரூசோவா ஆவார். ஓபன் போட்டிகளில் மேஜர் பட்டத்தை வென்ற எட்டாவது தரவரிசைப் பெறாத பெண்மணி வொண்ட்ரூசோவா ஆவார்.
இதையும் படிங்க: IND Vs WI: அஸ்வினின் அபார ஆட்டம்.. முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!