சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்புச் சார்பில், உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்றுவருகிறது.
இதில், இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அன்ஜும் மோட்கில்- திவ்யான்ஷ் சிங் பன்வர் இணை தங்கப்பதக்கம் தட்டிச் சென்றது. இதைத்தொடர்ந்து, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் மனு பக்கர் - சவுரப் சவுத்ரி இணை, சீனாவின் ஜியாங் ரன்ஸின்-பாங் வெய் ஜோடியை எதிர்கொண்டது.
11 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவின் மனு பக்கர் - சவுரப் சவுத்ரி ஜோடி 16-6 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. இதன் மூலம், இந்தத் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா இரண்டு தங்கப்பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் மனு பக்கர் - சவுரப் சவுத்ரி இணை தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கத்து.