சாங்வோன்: தென் கொரியாவின் சாங்வோன் நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஸ்கீட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் மைராஜ் அகமது கான் நேற்று (ஜூலை 18) தங்கப் பதக்கம் வென்றார். இந்த பிரிவில் இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.
இதனால் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. மொத்தம் 40 ஷாட்கள் கொண்ட இறுதிப் போட்டியில் மைராஜ் 37 ஷாட்களுடன் முதலிடம் பிடித்தார். இதையடுத்து தென் கொரியாவின் மின்சு கிம் 36 ஷாட்களுடன் இரண்டாம் இடத்தையும் இங்கிலாந்தின் பென் லெவெலின் 26 ஷாட்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இந்தியாவின் மூத்த துப்பாக்கிச்சுடுதல் வீரரான மைராஜ் அகமது கான் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவராவார். இவர் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதங்கங்கள் வென்றுள்ளார். குறிப்பாக, ரியோ டி ஜெனிரோவில் 2016ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் வெள்ளி வென்றார்.
இதையும் படிங்க: சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு