சமர்கந்த்: நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன், உலக பிளிட்ஸ் பட்டத்தை வென்று மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். உஸ்பெகிஸ்தானின் சமர்கந்த் நகரில் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த டிசம்பர் 25 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதன் இறுதிப்போட்டி நேற்று (டிச.30) நடைபெற்ற நிலையில், மாக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். ரஷ்ய கிராண்ட் மாஸ்டர்களான டேனியல் டுபோவ் (15.5 புள்ளிகள்) மற்றும் விளாடிஸ்லாவ் ஆர்டெமிவ் (15) ஆகியோரை விட, நார்வே செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்சன் 16 புள்ளிகளுடன் பட்டத்தை வென்றார். இது மாக்னஸ் கார்ல்சனுக்கு 17வது உலக சாம்பியன் பட்டமாகும். அதில் 5 கிளாசிக்கல் பட்டங்கள், 5 ரேபிட் மற்றும் 7 பிளிட்ஸ் பட்டங்கள் அடங்கும்.
-
Closing scenes in Samarkand 📸 @photochess pic.twitter.com/QYOdbPhKci
— Chess.com (@chesscom) December 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Closing scenes in Samarkand 📸 @photochess pic.twitter.com/QYOdbPhKci
— Chess.com (@chesscom) December 30, 2023Closing scenes in Samarkand 📸 @photochess pic.twitter.com/QYOdbPhKci
— Chess.com (@chesscom) December 30, 2023
ஒரு மோசமான தொடக்கத்தில் மீண்டு வந்த மாக்னஸ் கார்ல்சன், 21 சுற்றுகளில் மொத்தம் 16 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் முன்னிலை பெற்ற அவர், உலக பிளிட்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். இது குறித்து அவர் கூறியதாவது, "நான் நாள் முழுவதும் பதற்றத்தின் மூலம் ஓடுவதுபோல் உணர்ந்தேன். ஒவ்வொருவரும் இறுதி வரை போராடுகிறார்கள். ஆனால் யாரும் அவர்களது பெஸ்ட்டை கொடுக்கவில்லை. இது ஒரு நேரத்தில் ஆட்டத்தில் இருந்து தப்பி பிழைப்பது போன்றது. மேலும், எனது 17வது உலக சாம்பியன் பட்டத்தை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
தொடக்கத்தில் முதல் சுற்றுக்குப் பிறகு இந்திய வீரர்களான அர்ஜூன் எரிகைசி மற்றும் சரின் ஆகியோர் விளையாடியும், இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை. முடிவில் இவர்கள் இருவரும் முறையே 6வது மற்றும் 43வது இடத்தைப் பிடித்தனர்.
அதேபோல், அரவிந்த் சிதம்பரம் 13.5 புள்ளிகளுடன் 14வது இடத்தையும், ஆர். பிரக்ஞானந்தா 12.5 புள்ளிகளுடன் 28வது இடத்தையும் பிடித்தனர். மேலும், மகளிர் பிளிட்ஸ் பிரிவில் ரஷ்யாவைச் சேர்ந்த வாலண்டினா குனினா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வில்வித்தையில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த ஷீத்தல் தேவி.. எதற்காக தெரியுமா?