டிபிலிசி: ஜார்ஜியா நாட்டின் படுமி நகரில் நேற்று (ஆக 11) சர்வதேச உஷூ போட்டி நடந்தது. இதில் 18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான 48 கிலோ எடை பிரிவில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரியங்கா கேவத் தங்கப் பதக்கம் வென்றார். இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், "இது எனது முதல் சர்வதேசப் போட்டியாகும். எனது நாட்டின் கொடி உயரத்தில் பறப்பதைப் பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்த பொன்னான தருணத்தில் எனக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கிய பயிற்சியாளர்கள், பெற்றோர், எம்3எம் அறக்கட்டளைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள மத்திலா கிராமத்தை சேர்ந்தவர் பிரியாங்கா. ஒரு சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்த பிரியாங்கா, பள்ளி பருவத்திலிருந்தே உஷூ போட்டிகளில் கலந்துகொண்டு பல பதங்கங்களை குவித்துள்ளார்.
இதையும் படிங்க: காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டி - தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை பவானி தேவி