டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டிற்கான 32 ஆவது ஒலிம்பிக் மற்றும் பாரா போட்டிகள் நடந்து முடிந்தது. இதில், பல்வேறு நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதில் இந்தியா சார்பில், பங்குபெற்று சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ரவி குமார், நீரஜ் சோப்ரா, தாஹியா மற்றும் லவ்லீனா போர்கோஹெயின் உட்பட12 பேர் வெற்றி பதக்கங்களை நாட்டிற்குப் பெற்று தந்தனர்.
தியான்சந்த் கேல் ரத்னா விருது
இதனால், இந்தியா பதக்கப்பட்டியலில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலத்துடன் மொத்தம் 7 பதக்கங்களுடன் 48 ஆவது இடம் பெற்றது. மேலும், 2021 ஆம் ஆண்டிற்கான "தியான்சந்த் கேல் ரத்னா விருது" பெறுவதற்கு தேர்வானவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தேர்வான வீரர்கள் மற்றும் வீராங்கனைளின் பெயர்கள்,
டோக்கியோ ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகள்
1. நீரஜ் சோப்ரா (தடகளம்)
2. ரவி குமார் தஹியா (மல்யுத்தம்)
3. லவ்லீனா போர்கொஹெயின் (குத்துச்சண்டை)
4. ஸ்ரீஜேஷ் (ஹாக்கி)
பாரா ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகள்
5. அவனி லெக்ரா
6. ப்ரமோத் பகத்
7. கிருஷ்ணா நகர்
8. மணிஷ் நார்வால்
9. சுமித் அண்டில்
மற்றும்
ஷிகர் தவான், மித்தாலி ராஜ், சுனில் ஷேத்ரி ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழா வரும் நவ.13 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விளையாட்டுத் துறையில் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் இந்த விருது, விளையாட்டுத் துறையில் சாதித்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!