ஐதராபாத் : கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் மற்றும் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி சாதனை படைத்து உள்ளார்.
கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கிளாசிக்கல் 7வது சுற்றில் நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்செனை எதிர்த்து தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி களமிறங்கினார். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய கார்த்திகேயன் முரளி, அடுத்தடுத்தடுத்த துரித நகர்வுகளால் கார்ல்செனை களங்கடித்து இறுதியில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் இந்திய அணி 5 புள்ளி 5 ஸ்கோருடன் புள்ளிப் பட்டியலில் முதன்மை பெற்று உள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திகேயன் முரளி, இதற்கு முன் இரண்டு முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளார். முன்னதாக கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆறாவது சுற்றில் இரான் வீரர் பர்ஹம் மக்சூட்லூவை டிரா செய்து இருந்தார்.
அதேநேரம் மற்றொரு சிறப்புக்கும் தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி சொந்தக்காரர் ஆகியுள்ளார். உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்செனை கிளாசிக்கல் சுற்றில் வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்ற சிறப்பு அவருக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், மாக்னஸ் கார்ல்செனை, ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த பென்டலா ஹரிகிருஷ்ணா வீழ்த்தினார். அப்போது மாக்னஸ் கார்ல்செனுக்கு 14 வயது. அவரைத் தொடர்ந்து தமிழக செஸ் ஜாம்பவான் விஸ்நாதன் ஆனந்த், மாக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி இருந்தார். அந்த வரிசையில் தற்போது தமிழக வீரர் கார்த்திகேயன் முரளியும் இணைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : மகளிர் பிரீமியர் லீக் 2024: எந்தெந்த அணியில் எத்தனை வீராங்கனைகள் தக்கவைப்பு! முழு லிஸ்ட் இதோ!