துப்பாக்கிச் சுடுதலுக்கான ஜூனியர் உலகக்கோப்பை போட்டி ஜெர்மனியில் ஜூலை 13ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்திய வீரர்கள் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என ஐந்து பதக்கங்களை முதல் நாளே பெற்றனர்.
மேலும் இரண்டாம் நாள் முடிவில் நான்கு தங்கம், ஐந்து வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்களைச் சேர்த்து மொத்தம் 11 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.
மூன்றாம் நாளான நேற்றும் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்றனர். 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
இதன் மூலம் இந்தியா ஆறு தங்கம், ஆறு வெள்ளி, இரண்டு வெண்கலம் என 14 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.