யூஜின்: அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் 18ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், இன்று (ஜூலை 21) மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்று போட்டிகள் நடந்தன. இதில் இந்தியா ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி பங்கேற்றார். முதலாவது த்ரோவில் 55.35 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, சுற்றிலிருந்து வெளியேறும் நிலையிலிருந்தார்.
ஆனால், தனது 2ஆவது வாய்ப்பில் 59.60 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். தற்போது 8ஆவது இடத்தில் உள்ளார். அன்னு 2ஆவது முறையாக உலக சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டு தோஹாவில் நடந்த போட்டியில் 61.12 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். 2017ஆம் ஆண்டு லண்டனில் நடந்த போட்டியில் தகுதி பெற முடியவில்லை. கடந்த மே மாதம் ஜாம்ஷெட்பூரில் நடைந்த இந்திய ஓபன் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார்.
இதையும் படிங்க: உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் வரலாறு படைத்த மைராஜ் அகமது கான்