இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தனது ட்விட்டர் கணக்கில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனை பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார்.
இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் என்று வதந்திகள் பரவ ஆரம்பித்த பின்னர் இந்த நிகழ்வு நடந்துள்ளது. ட்விட்டரில், பும்ரா பின் தொடர்ந்து வரும் 25 நபர்களில் அனுபமா மட்டுமே நடிகை என்பதால் வதந்திகள் பரவின.
இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும், அதற்கு மேல் எதுவும் இல்லை என்றும் ஒரு நேர்காணலின் போது அனுபமா தெளிவுபடுத்தினார்.
இதைத் தொடர்ந்து பும்ரா ட்விட்டரில் அனுபமாவைப் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். இதனால், இவர் 24 நபர்களை மட்டுமே ட்விட்டரில் பின்தொடர்ந்து வருகிறார் .