கரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர், அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே அடுத்த ஆண்டில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா, வீரர்கள் பங்கேற்பதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படுமா போன்ற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்கும் ஒலிம்பிக் தொடருக்கு பின் பாரா ஒலிம்பிக் தொடரையும் நடத்துவதற்கு டோக்கியோ ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டோக்கியோ ஆளுநர் கொய்கி யுரிகோ பேசுகையில், ''டோக்கியா மற்றும் ஜப்பான் மக்கள் ஒலிம்பிக் தொடர் நடத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அப்போதுதான் எளிமையாகவும் வேகமாகவும் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியும்.
ஜூலை 24ஆம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 8ஆம் தேதி முடிவடையும். அதையடுத்து ஆகஸ்ட் 24ஆம் தேதி பாரா ஒலிம்பிக் தொடரை நடத்த ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். இதைப் பற்றி அரசு, ஒலிம்பிக் கமிட்டி, ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றிடம் பேசப்பட்டு வருகிறது'' என்றார்.