சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சார்பில், ஆண்டுதோறும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இதன் 55ஆவது தொடர் மார்ச் 22 முதல் மார்ச் 29வரை தென்கொரியாவில் நடைபெறவிருந்தது.
ஆனால், உலகளவில் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றால் இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்தத் தொடர் வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என, சர்வேதச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, ஜூன் 30 ஆம் வரை அனைத்து விதமான போட்டிகளையும், சர்வேதச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எல்லாரும் வீட்ல பாதுகாப்பா இருக்கிங்களா? ஊருக்குள் செக் செய்த காண்டாமிருகம்