உலகக்கோப்பை ரக்பி தொடர் போட்டிகள் ஜப்பான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஐயர்லாந்து அணி ரஷ்ய அணியை எதிர்கொண்டது.
இத்தொடரில் ஐயர்லாந்து அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி என குரூப் ஏ புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தது. அதே போல் ரஷ்யா அணி இத்தொடரில் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து குரூப் ஏ பிரிவின் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஐயர்லாந்து அணி ரஷ்யா அணியை வெளுத்து வாங்கியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐயர்லாந்து அணி ரஷ்யா அணியை ஒரு புள்ளிக் கூட எடுப்பதற்கு அனுமதிக்கவில்லை.
-
FT at #RWCKobe@IrishRugby power to the BP victory over @russiarugby
— Rugby World Cup (@rugbyworldcup) October 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Pool A is getting very tight with Japan v Samoa looking crucial on Saturday #IREvRUS #RWC2019 pic.twitter.com/4W7neRjvw8
">FT at #RWCKobe@IrishRugby power to the BP victory over @russiarugby
— Rugby World Cup (@rugbyworldcup) October 3, 2019
Pool A is getting very tight with Japan v Samoa looking crucial on Saturday #IREvRUS #RWC2019 pic.twitter.com/4W7neRjvw8FT at #RWCKobe@IrishRugby power to the BP victory over @russiarugby
— Rugby World Cup (@rugbyworldcup) October 3, 2019
Pool A is getting very tight with Japan v Samoa looking crucial on Saturday #IREvRUS #RWC2019 pic.twitter.com/4W7neRjvw8
இதனால் ஆட்ட நேர முடிவில் ஐயர்லாந்து அணி 35-0 என்ற புள்ளிக் கணக்கில் ரஷ்ய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐயர்லாந்து அணி 11 புள்ளிகளுடன் குரூப் ஏ புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. ரஷ்யா அணி இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.
இதையும் படிங்க: #NBA: இந்தியாவில் முதன்முறையாக மிதக்கும் கூடைப்பந்தாட்ட மைதானம்