ETV Bharat / sports

இந்தியாவின் டேவிட் பெக்காம்!

கவுகாத்தி: கேலோ இந்தியா யூத் கேம்ஸ் போட்டிகளில் 17 வயதே நிரம்பிய டேவிட் பெக்காம், தனது திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறார்.

indias-very-own-david-beckham-creates-ripples-at-khelo-india-youth-games

author img

By

Published : Jan 14, 2020, 11:11 PM IST

டேவிட் பெக்காம் என்றதும் இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்தான் அனைவருக்கும் நினைவில் வருவார். ஆனால் இந்த டேவிட் பெக்காம் இந்தியாவின் அந்தமான் தீவைச் சேர்ந்தவர். 17 வயதே நிரம்பியுள்ள டேவிட் பெக்காம், தனது அசாத்திய திறமைகளால் கவுகாத்தியில் நடக்கும் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இவர் ஒரு சைக்கிளிங் வீரர். டேவிட் பெக்காம் என்ற பெயர் குறித்து அவரிடம் பேசுகையில், '' எனது குடும்பத்தினர் கால்பந்து வீரர் டேவிட் பெக்காமின் மிகத் தீவிர ரசிகர்கள். நான் பிறந்தவுடனேயே எனக்கு டேவிட் பெக்காம் பெயரினை வைத்துவிட்டார்கள். இப்போது நானும் டேவிட் பெக்காம் ரசிகன்தான். நானும் கால்பந்து விளையாடுவேன். சுக்ரடோ கால்பந்து தொடரில் விளையாடியுள்ளேன். ஆனால் நான் சைக்கிளிங் போட்டிகளில் பங்கேற்பதற்கு எனது தாத்தாதான் காரணம்'' என்றார்.

டேவிட் பெக்காம் 2017ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த தேசிய அளவிலான சைக்கிள் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

சைக்களிங் பற்றி பேசுகையில், ’’ நான் எனது சைக்கிளிங் பயிற்சியை 2017ஆம் ஆண்டில்தான் தொடங்கினேன். பயிற்சியின் தொடக்கத்தில், சைக்கிள் மீது அமர்ந்தால் எனது கால்கள் தரையை எட்டாது, ஆனாலும் நான் சைக்கிளிங்கில் சிறப்பாக செயல்பட்டேன். அந்தமான் போன்ற இடங்களில் சைக்கிளிங் பயிற்சிகளுக்கு போதிய வசதிகள் கிடையாது'' என்றார்.

டேவிட் பெக்காம் குடும்பம் பற்றி விசாரிக்கையில், அவரது சிறு வயதிலேயே அப்பா 2004 சுனாமியில் உயிரிழந்ததாகவும், 2014ஆம் ஆண்டு அம்மா உடல்நலம் சரியில்லாததால் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. தற்போது டேவிட் பெக்காம், அவரின் தாத்தாவுடன் தங்கியுள்ளார்.

எதிர்காலத்தில் சைக்கிளிங் ஆசை பற்றி பேசுகையில், '' இதுவரை நான் பெரிதாக எந்த குறிக்கோளும் வைத்துக்கொள்ளவில்லை. எனது பயிற்சியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என தீர்மானித்துள்ளேன். எதிர்காலத்தில் எனது உழைப்பிற்கு ஏற்ப சாதனைகள் படைப்பேன் என நம்புகிறேன்'' என்றார்.

இதையும் படிங்க: நிஜ டான்களிடம் சரண்டரான இந்தியா!

Intro:Body:

Guwahati: It is not just England who have David Beckham, India too now boasts its own 17-year-old David Beckham from Andaman, who is creating ripples at the ongoing Khelo India Youth Games as a cyclist.

This teenager was named after the football great, and is currently in Guwahati to compete in cycling. 

"My family is a huge fan of David Beckham, so they named me after him. I also became a David Beckham fan. I used to play football. I have played in the Subroto Cup tournament. Then my grandfather asked me to take up cycling," said Beckham.

The cyclist, who has won a silver in a national competition, expressed that he started cycling in Delhi in 2017.

"I started cycling in Delhi in 2017. In the beginning, my feet didn't touch the ground when I sat on the cycle seat. Eventually, I started doing well in the sport. It's difficult to find facilities for cycling in Andaman, so I have to go to bigger cities for training," said the 17-year-old.

Beckham is taking his first few steps in the world of cycling, but he has already faced big challenges in life. The cyclist lost his father due to the Tsunami in 2004 and his mother passed away due to an infection in 2014. He is currently living with his maternal grandfather.

The cyclist said that he hasn't set any specific goals yet. He is just looking to give his best during training.

"I have not set any specific goals for myself yet. I am just focusing on giving my best during training and hope that I taste success in the near future," said Beckham.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.