அனைவரது கவனமும் உலகக் கோப்பை தொடர் மீது இருக்கும் இந்த தருணத்தில், இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளார். செக் குடியரசு நாட்டின் உள்ள கிளாட்னோவில் நேற்று நடைபெற்ற கிலாட்னோ மேமோரியல் தடகள போட்டியில், இந்திய வீராங்கனை ஹீமா தாஸ் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார்.
இதில், சிறப்பாக செயல்பட்ட ஹீமா பந்தைய இலக்கை 23.43 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இவர், இதற்கு முன்னதாக போலந்தில் நடைபெற்ற போசான் தடகள போட்டி, குட்னோ தடகள போட்டி ஆகிய இரண்டிலும் தங்கம் வென்றார். இதன்மூலம், இவர் இரண்டு வாரத்திற்குள் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.