நடப்பாண்டிற்கான ஆட்ரியாடிக் பெர்ல் குத்துச்சண்டைப் போட்டிகள் மாண்டிநீக்ரோ நாட்டில் நடைபெற்றுவருகின்றன.
நேற்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 60 கிலோ பிரிவில் இந்தியாவின் வின்கா (Vinka), மால்டோவாவின் கிறிஸ்டினா குய்பரை எதிர்கொண்டார். இப்போட்டியில் வின்கா 5-0 என்ற கணக்கில் கிறிஸ்டினா குய்பரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.
அதேபோல் மகளிர் 75 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சனமாச்ச சானு (Sanamacha chanu), சகநாட்டு வீராங்கனையான ராஜ் சாஹிபாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியின் முடிவில் சனமாச்ச 5-0 என்ற புள்ளிக்கணக்கில் ராஜ் சாஹிபாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம் ஆட்ரியாடிக் பெர்ல் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய அணி இன்று ஒரேநாளில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.
இதையும் படிங்க: ‘ஐபிஎல் ஏலம் எதிர்பார்த்த ஒன்றே’ - ஆரோன் ஃபின்ச்